fbpx
Connect with us

Cinemapettai

அல்வா கொடுத்த ஆஸ்கார் நாயகன்.. ரொம்ப நல்லவருன்னு நினைச்சோமே, இவரும் இப்படி பண்ணிட்டாரே!

India | இந்தியா

அல்வா கொடுத்த ஆஸ்கார் நாயகன்.. ரொம்ப நல்லவருன்னு நினைச்சோமே, இவரும் இப்படி பண்ணிட்டாரே!

பாலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரகுமான். இவருடைய இசைக்கு மயங்காதவர் எவருமில்லை.

இசையில் ஆர்வம் இருக்கும் ஏழை மாணவர்களை திறமையை வெளிக்கொண்டு வரவே சமீபத்தில் தனது நீண்ட நாள் கனவான KM மியூசிக் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரியை முகேஷ் அம்பானியை வைத்து சென்னையில் தொடங்கினார் ஏ. ஆர். ரகுமான். இதேபோன்று ஏழை மாணவர்களுக்காக ஒரு அறக்கட்டளையும் தொடங்கியுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்தின் லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்காக ரிங்டோன் அமைக்க ஏ. ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியிருந்தார். அதற்காக அவர் 3 கோடியே 47 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

இந்த சம்பளத்தை கையில் வாங்காம, அவர் நடத்துற அறக்கட்டளை வங்கி கணக்கில் போடச் சொல்லி இருக்காரு, ஏன்னா அப்பதான் வருமான வரி செலுத்தாம எஸ்கேப் ஆயிடலாம்னு ப்ளான் பண்ணி இருக்காரு.

இதைத் தெரிஞ்சுகிட்ட மத்திய வருமான வரித்துறையினர் ஏ. ஆர். ரகுமானின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த முதன்மை ஆணையர் ஏ.ஆர்.ரகுமானின் வாதத்தை ஏற்று வழக்கு கைவிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் வருமான வரித் துறையின் சார்பில் இந்த வழக்கானது மேல் முறையீடு செய்யப்பட்டு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்விற்கு வந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருமானவரி துறையினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஏ. ஆர். ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Continue Reading
To Top