ஏஆர் ரகுமான் படைத்த சாதனைகள்.. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கேனு மாஸ் பண்ணிருக்கார்

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாகஇருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே இன்று வரை ரசிகர்கள் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த அளவிற்கு தனது இசையின் மூலம் பல கோடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் ஏகப்பட்ட சாதனைகள் பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார். பல வித்தியாசமான இசை கருவிகளை அறிமுகப்படுத்தி அதுமட்டுமில்லாமல் தற்போது இருக்கும் இசைக் கலைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழியைத் தாண்டி பல மொழிகளில் தனது இசைபயணத்தை தொடர்ந்து வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்த முதல் படத்திலேயே தனது தேசிய விருதை வாங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் பிறகு 2 ஆஸ்கர் விருதுகளையும் வாங்கி அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்தார். சர்வதேச மேடையில் கூட தனது தாய்மொழியான தமிழை தான் அவர் பலமுறை உச்சரித்து தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தார்.

இவர் ஏறும் அனைத்து மேடைகளிலும் தாய்மொழியான தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே எனக் கூறுவது வழக்கமான ஒரு செயலாக வைத்துள்ளார். திரைத்துறையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஏ ஆர் ரஹ்மான் பெயரில் கனடாவில் அல்லா ரக்கா ரஹ்மான் என்ற பெயரில் ஒரு தெரு இடம்பெற்றுள்ளது. உலகளவில் இவரது பாடல்கள் 20 கோடிக்கு மேல் கேசட்டுகள் வெளியாகியுள்ளன. ஏ ஆர் ரஹ்மானும் அவரது மகனும் ஒரே நாளில் பிறந்துள்ளனர்.

தொடர்ந்து தனது இசையின் மூலம் பல சாதனைகள் படைத்து வரும் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் அவரது மகனும் இதே நாளில் பிறந்துள்ளதால் பல பிரபலங்களும் அவரது மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமானின் இந்த சாதனைகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் தற்போது வரை தனது இசை பயணத்தை தொடர்ந்து வரும் ஏ ஆர் ரகுமான் இனிவரும் காலங்களிலும் பல விருதுகள் வாங்குவார் என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

ஏ ஆர் ரகுமானை அனைவருக்கும் பிடிப்பதற்கு காரணம் அவருடைய எளிமையான குணம். இந்தியர்களுக்கு அடையாளமாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து இசை பயணத்தில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்