அட ஆமாங்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின்  நேரடி தெலுங்கு படத்தில் இருந்து  ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சயீரா நரசிம்ம ரெட்டி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிம்மாவின், சுதந்திர போராட்ட வீரர்  உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சிரஞ்சீவி யுடன் , அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், டாக்டர் ராஜசேகர், விஜயசாந்தி,   உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆனது.  இந்தப்படம் சிரஞ்சீவி அவர்களின் கனவு படம். சுமார் ரூ.150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இந்த படத்தினை ராம் சரண் தயாரிக்கிறார்.

படத்தின் பூஜை முடிந்து, இன்னமும்   படப்பிடிப்பு தொடங்காத நிலையில், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரவிவர்மன் விலகினார். அவருக்கு பதிலாக நீரவ் ஷா அவர்களை ஒப்பந்த செய்ய முயற்சி செய்தது ராம் சரண் தரப்பு. எனினும் இறுதியில்  ஆர்.ரத்னவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இசை தமன் தான் செய்திருந்தார்.

ஆரம்பம் முதலே பல படங்களில் பிஸியாக இருந்த காரணத்தால் ரஹ்மான் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலக முயற்சித்தார், எனினும் படக்குழு அவரை தொடருமாறு வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். அவருக்கு பதிலாக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.