வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மனைவியிடம் புலி, அப்பாவிடம் பூனை.. பிரபல சினிமா ஜோடியின் குடும்ப பிரச்சனையை லைவில் சொன்ன சாய்ரா பானுவின் வக்கீல்!

AR Rahman: பெரிய செலிபிரிட்டிகளின் விவாகரத்து வழக்கு கையாண்டு வருபவர் தான் வந்தனா ஷா. இவர் சமீபத்தில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா பானுவின் விவாகரத்து வழக்கில் சாய்ராவின் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.

அவரின் விவாகரத்து அறிவிப்பை இவர் மூலம் தான் சாய்ரா வெளியிட்டார் என்பது கூட குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் வேலை செய்யும் கிட்டரிஸ்ட் ரகுமான் விவாகரத்து வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே தன்னுடைய விவாகரத்து செய்தியை வெளியிட்ட போது இருவருக்கும் தவறான காதல் இருப்பதாக செய்திகள் வெளியானது.

பிரபல சினிமா ஜோடியின் குடும்ப பிரச்சனை

இதை திட்டவட்டமாக மறுத்த நபரும் இந்த வந்தனா தான். இவர் தன்னுடைய பிராட்காஸ்ட் சேனலில் பிரபல சினிமா ஜோடியை பற்றி அவருடைய நேயர்களிடையே பகிர்ந்து இருக்கிறார். அதாவது ரொம்பவும் பிரபலமான இந்த சினிமா ஜோடி தற்போது விவாகரத்து வரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் அந்த நடிகையின் மாமனார் தான். அதாவது அந்த நடிகையின் கணவரும் பிரபல ஹீரோதான். பொண்டாட்டியிடம் புலி போல் பாய்வதும், அப்பாவிடம் பூனை போல் பதுங்குவதுமாக இந்த ஹீரோ தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பொருளாதார மற்றும் புகழ் இரண்டிலும் உச்சத்தில் இருக்கும் அந்த நடிகையால் இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்க முடியவில்லை. ஹீரோ அப்பாவிடம் பூனை போல் பதுங்க காரணம் அவருடைய பத்தாயிரம் கோடி சொத்து தான் என வந்தனா சொல்லி இருக்கிறார்.

இந்த பிரபல சினிமா ஜோடி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தான் என தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அபிஷேக் பச்சன் நிறைய பொதுவெளிகளில் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யாவை ரொம்பவும் மனம் கஷ்டப்படும்படி நடத்தி இருக்கிறார்.

சமீப காலமாக இருவரும் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. இந்த ஜோடிக்கு விவாகரத்து ஆகப் போவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. வந்தனாவின் இந்த பிராட்காஸ்ட் கேட்கும் பொழுது கண்டிப்பாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியை தான் பேசுகிறார் எனவும் சொல்லி வருகிறார்கள்.

- Advertisement -

Trending News