Connect with us
boomerang-movie

“99 பாடல்கள்” பட போஸ்டரில் அசத்தும் ஆஸ்கார் நாயகன்

News | செய்திகள்

“99 பாடல்கள்” பட போஸ்டரில் அசத்தும் ஆஸ்கார் நாயகன்

99-songsஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராகத்தானே நமக்குத் தெரியும். அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவர் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரே வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தின் பெயர் “99 சாங்ஸ்” (99 Songs). இப்படத்தை எழுதி இயக்கிவருவது விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி, மேலும் இப்படத்திற்கான கதையை உருவாக்கியிருப்பது ஏ.ஆர்.ரஹ்மான் தான். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்று கூறவா வேண்டும் அதுவும் ஏ.ஆர். ஆர் தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் தேசிய விருதைத் தாண்டி ஆஸ்காரையும் அதிரவைத்தது. அவரின் சொந்தப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் நிச்சயம் வேற லெவலில் தான் இருக்கும் என்று இசைரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

ஏ.ஆர்.ஆர் வெளியிட்டுள்ள இந்தப் போஸ்டர் இன்னும் எதிர்ப்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இரண்டு காதல் பறவைகள், பியானோவை பிடித்திருப்பது போல அமைந்திருக்கும் இந்தப் போஸ்டரையே இசையை மையப்படுத்தி உருவாக்கியிருப்பது ஸ்பெஷல்.

இதுபற்றி ஏ.ஆர். சமுகவலைதளங்களில்,“ உங்களின் ஆதரவு ஆசீர்வாதத்துடன் என்னுடைய முதல் படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இசைப்புயலின் இசைப்படம்! வாழ்த்துகள் ஏ.ஆர்.ஜி!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top