ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தற்கால இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘சந்தோஷ் நாராயாணன், ஜிப்ரான், அனிருத் இசை தன்னை கவர்ந்ததாகவும் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் தப்பித்தவறி கூட அவர் தனது நெருங்கிய உறவினரான ஜி.வி.பிரகாஷ் பெயரை குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடாத இன்னொரு பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்.

அதிகம் படித்தவை:  ஜி.வி.பிரகாஷின் அம்மா தயாரிக்கும் படத்திற்கு இப்படியொரு பெயரா?

அப்படியானால் இவர்கள் இருவரும் ரஹ்மானின் மனதை கவரவில்லையா? அவருடைய குட்புக்கில் இவர்களுக்கு இடமில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஹாரீஸ் ஜெயராஜ் தன்னிடம் இருந்து சென்ற மாணவர், அதேபோல் ஜி.வி.பிரகாஷ் நெருங்கிய உறவினர். எனவே இருவரையும் விமர்சனம் செய்ய தேவையில்லை என்ற கருத்தில்தான் ரஹ்மானின் கருத்து அமைந்தது என்றும் இருவர் மீது ரஹ்மானுக்கு மிகுந்த அன்பு உண்டு என்றும் ரஹ்மானுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அதிகம் படித்தவை:  ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக பிரபல நடிகை ஒப்பந்தம்...!!!

எனவே இதை ஒரு பிரச்சனையாக ஊடகங்கள் எழுப்ப வேண்டாம் என்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக ரஹ்மான் ஸ்பெஷலாக பாடல்களை கம்போஸ் செய்து வருவதே இதற்கு சான்று என்றும் கூறப்படுகிறது.