fbpx
Connect with us

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கர் தமிழன் ஏ. ஆர். ரஹ்மான் !

News / செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கர் தமிழன் ஏ. ஆர். ரஹ்மான் !

SivaKarthikeyean @ Director Ravikumar- Priya Marriage

இன்று நேற்று நாளை,  படத்தை இயக்கிய ரவிகுமார், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

2019ம் ஆண்டு திரைக்கு வர உள்ள இப்படத்தை 24ஏம் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது. இது அவர்கள் பாணரில் தயாராகும் ஐந்தாவது படம்.

24 AM

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் இன்னமும் பெயர் வைக்கப்படாத  புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக்குடன் படத்தின் பெயரையும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.

 

இந்நிலையில் பொன்.ராம் படத்தைத் தொடர்ந்து  ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது சிவாவின் 13 வது படம்.

SK

முழுக்க முழுக்க  அறிவியல் சம்பந்தப்பட்ட படம் இது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

ARR

இந்நிலையில் இந்தியாவின் பெருமையான ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதன் மூலம் தனது மிகப் பெரிய கனவு நனவாகிவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியாவின் பெருமையாக கருதப்படும், மற்றும் மிகவும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்தியேன்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஏ. ஆர். ரஹ்மான் சில காலமாக தமிழ் படங்களை குறைத்துக்க்கொண்டார். தற்பொழுது அவர் மீண்டும் தமிழில் கவனமா செலுத்துவது மகிழ்ச்சியாகவே உள்ளதே. ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம், தளபதி விஜய்யின் புதிய படம், மணிரத்தினத்தின் படம், சிவா கார்த்திகேயனின் இப்படம்.

அடடா மீண்டும் இசைப்புயல் நம் தமிழ் நாடு பக்கம் வீசப்போகிறது !!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top