பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய சர்ச்சையில் சிக்கியுள்ள பிஎஸ்பிபி.. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த சிறுவன் ஒரு காலத்தில் PSBB பள்ளி படிப்பை முடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். பின்பு தன்னுடைய திறமையாலும் புகழாலும் தன் படிப்பை நிறுத்திய பள்ளிக்கு பெருமை சேர்த்த அந்த சிறுவன்தான் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். தற்போது உச்சத்தில் இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் அவரது சிறு வயதில் பல கஷ்டங்கள் பட்டுள்ளார்.

இவரது பள்ளி கட்டணத்தை கட்ட முடியாததால் PSBB பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியைவிட்டு நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் வழக்கமான வகுப்புகளையும் தேர்வுகளையும் எழுதுவதற்கு ரகுமானை தடை செய்தது.

அப்போது ஏ ஆர் ரகுமானின் தாயாரை அழைத்து YG மகேந்திரன் உங்களுடைய குடும்ப சூழ்நிலை பொருட்படுத்தாமல் கல்வியாளர்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார். பின்பு வேறுவழியின்றி ஏ ஆர் ரகுமானின் தாயார் எம் சி என் என்ற பள்ளியில் ரகுமானை சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

ar-rahman
ar-rahman

பின்பு மெட்ராஸ் கிரிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார். அங்கு ரகுமான் இசை திறமைக்கு அனுமதிக்கப்பட்டதால் உயர்நிலைப்பள்ளி வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தனது இசைக் குழுவை உருவாக்கினார்.

பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் ஏ ஆர் ரகுமான் அவரது தந்தை வைத்திருந்த இசைக்கருவியை வைத்துதான் தொழில் நடத்தி தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அதன்பிறகு இளையராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக இருந்து அவரிடம் ஒரு சில திறமைகளை கற்றுக் கொண்டார்.

பின்பு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி. தற்போது உலகத்தையே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று வாழ்க்கையில் சாதித்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

இந்த மாதிரி அப்போதே PSBB பள்ளி மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட இப்பள்ளியின் ஆசிரியர் ஒரு மாணவியிடம் ஆன்லைன் பள்ளியில் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற சம்பவம் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது பள்ளி. அப்படி இந்த பள்ளி நிராகரிக்கப்பட்டு பின்பு இந்த பள்ளிக்கு பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.

- Advertisement -spot_img

Trending News