திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ரொம்ப அருவருப்பா இருக்கு, முறை தவறிய உறவு.. Night தான் Recording-க்கே கூப்பிடுவாரு!

கடந்த ஒரு வாரமாக ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. பல முறை “இது எங்க பிரைவசி.. இதை பற்றி பேசாதீர்கள்” என்று கூறிய பிறகும், தொடர்ந்து இதே பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து செய்தி வெளியான ஒரு நாளுக்குள்ளையே, அவரது ட்ரூப்பில் இருக்கும், சித்தார் கலைஞருக்கும் விவாகரத்து என்ற செய்தி பரவியது.

இந்த நிலையில், சினிமா துறையில், மிஸ்டர் கிளீனாக வளம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலர், சித்தார் கலைஞருடன் தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்தனர். இதை பார்த்த ரஹ்மானின் மகள், மகன் ஆகியோர் மிகுந்த வருத்தம் அடைந்து, தயவுசெய்து தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசாதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர்.

நைட் தான் ரெகார்டிங்-க்கே கூப்பிடுவாரு

சூழ்நிலை இப்படி இருக்க, இது தொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, “ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து செய்தி வந்தமுதல், ஒவ்வொரும் பேசுவதையெல்லாம் கேட்கும்போது மிகவும் அருவருப்பாக உள்ளது. அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். வேலையுண்டு, தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்க கூடியவர்..”

“ஸ்டூடியோ-விற்கு வர கூடிய ஆர்ட்டிஸ்ட், டைரக்டர்கள் எல்லோரோடும் கண்ணியமாக பழக கூடியவர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அவர் ஸ்டூடியோ-விற்கு வரும்போது, யாராவது குடித்துவிட்டு வந்தால், உள்ளே அனுமதிக்கமாட்டார். அது எவ்வளவு பெரிய டைரக்டர் ஆக இருந்தாலும் சரி.. ஹீரோவாக இருந்தாலும் சரி.. அப்படி பட்டவர் முறை தவறிய உறவுகளுக்குள் செல்ல வாய்ப்பே இல்லை..”

“பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் இரவு நேரத்தில் தான் பாடலுக்கான ரெகார்டிங் வேலைகளை செய்வார். அவர் ஒருவரின் ஸ்டூடியோ-வுக்கு மட்டும் தான் பெற்றோர்கள், நம்பி தனது மகள்களை இரவு நேரம் அனுப்புவார்கள்.

சென்னையில் எத்தனையோ, இசையமைப்பாளர்கள் உள்ளனர். வேறு யாருடைய ஸ்டூடியோ-விற்கு அனுப்புவதாக இருந்தாலும் பகல் நேரத்தில் மட்டும் தான் அனுப்புவார்கள்.. அப்பேற்பட்ட அப்பழுக்கு இல்லாத ஒரு நபர்.. அவரை பற்றி இப்படியெல்லாம் பேசுவோர்களை காணும்போது அருவருப்பாக இருக்கிறது..” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News