Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்-க்கு தான் குறி.. ஆனால் பழி என்மேல்.. முருகதாஸ் வேதனை
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்ற செய்தி சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்கியராஜ் அவர்கள் முழு கதையை படிக்காமலேயே ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக குறிப்பாக தளபதி விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அவரை குறிவைத்து என் மீது பழி போடுவது போல் இருக்கிறது. ஒரு வீட்டின் மேலே தாக்குதல் நடத்த வேண்டுமென்றால் முதலில் வீக்கான கண்ணாடி மீது கல்லெறிவது போல்.
இந்தப் பிரச்சனைக்கு தளபதி விஜய் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு; ‘யாரிடமும் நான் உதவி கேட்டு நின்றதில்லை. இது எனக்கென வந்த அக்னி பரிட்சை இதை நான் தான் தாண்ட வேண்டும். ஆகையால் தளபதியை கஷ்டப்படுத்த விரும்பவில்லை நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

SARKAR
இந்த பிரச்சனையை இரண்டு பாகங்களாக பார்க்கும்போது ஒன்று ஏ.ஆர் முருகதாசுக்கு வந்த சோதனை, மற்றொன்று இப்படத்திற்கான விளம்பரம் என்றும் கூறலாம். நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில் கூறும்போது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பார்க்க வேண்டுமென்றால் இதுபோன்ற பிரச்சினைகள் பண்ணாமல் எங்களிடம் வந்தால் நாங்களே போட்டு காண்பித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.
இவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் போது தீபாவளிக்கு ரிலீசாகும் பட வரிசையில் சர்கார், பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் திமிரு புடிச்சவன் படமும் சேர்ந்துள்ளது. இதைப் பற்றி விஜய் ஆண்டனி கூறும்போது இந்தப் படத்தின் கதை ஒரு வருட தீபாவளியை மையப்படுத்தி எடுத்திருப்பதால் தீபாவளி அன்று வெளிவருகிறது என்கிறார்.
