வெளிநாட்டு பானங்களான கோக் மற்றும் பெப்சி குடிப்பதை நிறுத்தி 3 ஆண்டுகளாகிவிட்டதாக இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை விஜய்யை வைத்து கலாய்த்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடந்தபோது வெளிநாட்டு பானங்களான கோக் மற்றும் பெப்சிக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது.

சில கடைகள் கோக், பெப்சி விற்பதை நிறுத்தியுள்ளன. அதற்கு பதிலாக இளநீர், பதநீர், மோர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

3 ஆண்டுகளுக்கு முன்பு நான் கத்தி படக் கதையை எழுதத் துவங்கியதுமே கோக் மற்றும் பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். தற்போது அந்த பானங்கள் எங்களின் படப்பிடிப்பு தளத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் விஜய் ஒரு காலத்தில் கோக் விளம்பரத் தூதவராக இருந்த புகைப்படத்தை போட்டு கலாய்த்துள்ளனர்.