Tamil Cinema News | சினிமா செய்திகள்
முருகதாஸ் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? அதிரும் கோலிவுட் பரபரப்பான தகவல்

இயக்குனர் முருகதாஸ் படம் என்றாலே ரசிகர்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும், இவருடன் விஜய் இணைந்தால் நாம் சொல்லவா வேண்டும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை, தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் சர்க்கார் முருகதாஸ் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்த வேலையில் இறங்கியிருக்கிறார்.
அடுத்து முருகதாஸ் யாருடன் இணையப் போகிறார் பலரின் கேள்வியாக இருந்துவருகிறது, இந்த நிலையில் தற்போது ஒரு நம்பத் தகுந்த தகவல் வெளியாகியுள்ளது அடுத்து முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி முருகதாஸ் ஒரு கதையை ரெடி செய்து விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை முடிந்ததும் இயக்குனர் முருகதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்
