பொதுமேடையில் முருகதாசை அவமானப்படுத்திய பாக்கியராஜ்.. வீட்டிற்கு போயும் விரட்டிய பரிதாபம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற இன்றும் மறக்க முடியாத பல படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் எடுத்த பல படங்கள் சமூக கருத்துக்களை முன்வைத்து மிக தைரியமாக எழுதப்பட்ட கதையாக இருக்கும். இதனால் குறைந்த நாட்களில் மிகப்பெரிய உயரத்தினை இவரால் அடைய முடிந்தது.

அந்த வரிசையில் விஜய்யோடு தொடர்ந்து கைகோர்த்த முருகதாஸ் இணைந்த இரண்டு முறையும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதே போல பல படங்களையும் இவரது தயாரிப்பில் தயாரித்தும் இருக்கிறார். அப்படி இவருடைய இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் தான் தளபதி விஜய்யின் சர்க்கார் திரைப்படம். சர்க்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு அந்த படத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்தன. முக்கியமாக அந்த படத்தின் கதையே சர்ச்சைக்குள்ளானது.

இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதை ஏ ஆர் முருகதாஸ் திருடி இந்த சர்க்கார் படத்தை எடுத்து வருகிறார் என்றும் பல்வேறு சர்ச்சைகள் படத்தை ஆரம்பித்த நாளில் இருந்து வந்து கொண்டு இருந்தது. இறுதியாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த முருகதாஸ் இந்த சர்க்கார் கதைக்காக முதலில் வழக்கு தொடரப்போவதாக சொன்ன நடிகர் பாக்யராஜிடம் பேசி பார்க்கலாம் என முடிவு செய்தார் இயக்குனர் முருகதாஸ் .

அப்படி பேசியும் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. மேடையில் பேசிய பாக்யராஜ் அவர்கள் இதனை ஓப்பனாக கூறியிருக்கிறார். முதலில் ஏ.ஆர் முருகதாஸ் , இந்த சர்ச்சையில் சமாதானம் பேசிக்கொள்ளலாம் என்று மிகவும் பணிவாக கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் சமரசம் பேச இடமில்லை என்றும் எனக்கு நீதி தான் முக்கியம் என்றும் கூறி இருக்கிறார் பாக்யராஜ்.

இந்த கதையினை ஏற்கனவே வருண் எனும் இளம் இயக்குனர் பதிவு செய்து வைத்து இருந்ததாகவும் அதன் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் இந்த படத்தின் கதையை திருடி சர்க்கார் என்ற படத்தை எடுத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த சர்ச்சை இன்றளவும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது. நான் எப்போதும் நியாயத்தின்படி தான் நடப்பேன் என்று கூறிய பாக்கியராஜ் இதனை பகிரங்கமாக பதிவு செய்தும் இருக்கிறார்.

ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஏ.ஆர் முருகதாஸின் மார்க்கெட் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இன்று அதல பாதாளத்திற்கு சென்று இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இதைக் கூறலாம். இது இந்த படத்திற்கு மட்டுமல்ல இவர் எடுத்த இரண்டு மூன்று படங்களுக்கு இதே பிரச்சனை நீண்டுகொண்டே இருந்தது. காப்பியடித்து அதன்பின் மாட்டிக்கொள்ளும் இயக்குனர்களுக்கு மத்தியில் படம் எடுப்பதற்கு முன்பே படத்தின் மொத்த கதையையும் திருடி எடுக்கிறார் ஏ ஆர் முருகதாஸ் என்று சமூக வளைதளத்தில் இவரை வறுத்தெடுத்த கதைகளும் உண்டு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்