100 நாட்கள் ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் - Cinemapettai
Connect with us

Cinemapettai

100 நாட்கள் ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள்..

ar-murugadoss-hit-movies-list

Celebrities | பிரபலங்கள்

100 நாட்கள் ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள்..

மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள்

தீனா முதல் சர்கார் வரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அனைத்து படங்களும் வித்தியாசமாக இருக்கும். வெற்றி தோல்வி படங்கள் இருக்கும். அவற்றில் வெற்றி பெற்ற படங்கள் சில.

#தீனா

ajith

தீனா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தீனா படம் மூலம் தான் அஜித்துக்கு தல என பெயர் கிடைத்தது. ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமே மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.”Sollamal Thottu Chellum Thendral” பாடல் இப்பொழுதும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

#ரமணா

a. r.murugadoos ramana

a. r.murugadoos ramana

2002ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ரமணா படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் தமிழ் திரையுலகில் ஒரு சக்கைபோடு போட்டது. இப்படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி இருப்பார். இந்த படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இயக்குனர் என்ற பெயர் இவருக்கு கிடைத்தது.

#கஜினி

gajini

gajini

சூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் கஜினி, இந்த படத்தின் மூலம் சூர்யாவிற்கு அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. குறிப்பாக அசின் நடிப்பும் சூர்யா நடிப்பும் இந்த படத்தில் பெரும் அளவில் பேசப்பட்டது, சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயரான சஞ்சய் ராமசாமி அந்த வருடத்தில் அனைவராலும் பேசப்படுமளவிற்கு அனைவரிடமும் சென்றடைந்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். இப்படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி அங்கேயும் இவரது வெற்றியை பதித்தார்.

#துப்பாக்கி

vijay thupakki, a r murugadoos

vijay thupakki, a r murugadoos

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த படம் துப்பாக்கி 2012ஆம் ஆண்டு வெளியானது. முதல்முறையாக இந்த கூட்டணி ஒன்று சேர்ந்து தமிழ் திரையுலகில் 100 கோடி என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பாடலில் சிறு காட்சியில் வந்து செல்வார். இன்றளவும் விஜய் ரசிகர் மத்தியில் இப்படம் நீங்கா இடம் பெற்றுள்ளது.

#கத்தி

vijay kathi a r murugadoos

vijay kathi a r murugadoos

இந்த வெற்றிக்கூட்டணி மறுபடியும் இணைந்தது 2014ஆம் ஆண்டு இணைந்தது. இந்த படத்தின் மூலம் விவசாய மக்களுக்கு நடக்கும் அவலங்களை எடுத்துச் சொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ஒரு விவசாயின் வேதனையையும் அவன் படும் துன்பத்தையும் மக்களுக்கு எடுத்து சொல்லி இருப்பார். இந்த படத்திலும் மக்களுடன் சேர்ந்துவருவது போல் ஒரு காட்சியில் வந்து செல்வார்.அந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஏழாம் அறிவு சரியாக ஓடவில்லை.. சூர்யா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இவர்களது கூட்டணி மறுபடியும் 2011ஆம் ஆண்டு இணைந்தது. ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் இவர்களது கூட்டணி அந்த ஆண்டு சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் வரும் போதி தர்மனின் கதாபாத்திரம் உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தில் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன் அறிமுகமானார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி சீனாவிலும் வெளியானது அங்கு ஒரு தமிழனின் சிலை வைக்கப்பட்டுள்ளது இப்படத்தில் மூலம் எடுத்துக் காட்டி இருப்பார்.

தற்பொழுது சர்கார் பெரும் இடங்களில் வசூல் ரீதியாக வென்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top