ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சூப்பர் ஸ்டார் படத்தில் சம்பவம் செய்யப்போய் சிக்கலில் மாட்டிய ஏ.ஆர் முருகதாஸ்.. போன மார்கெட் திரும்ப வருமா?

சூப்பர் ஸ்டார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வந்த நிலையில் சூப்பர் ஸ்டாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்

தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், தர்பார் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். தமிழில் மட்டுமட்மல்ல தெலுங்கிலும், இந்தியிலும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

தற்போது, எஸ்கே 22 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இப்படத்தில் இதுவரை இல்லாத சிவகார்த்திகேயான அவரை ஸ்கிரீலும் கேரக்டரிலும் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சன் பாணியில் இப்படம் உருவாகி வரும் எனக் கூறப்பட்ட நிலையில், ஷூட்டிங் பல மாதங்களாக கடந்து வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே தமிழில் சூர்யா நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சூர்யா, கஜினி படத்தின் 2 வது பாகம் எடுக்க தயார் என தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தன்னை அணுகிக் கேட்டதாக கூறியிருந்தார். அதேபோல், இந்தியில் கஜினி2 படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக அமீர்கானும் கூறியிருந்தார். இதனால் இவ்விரு படங்களின் முதல் பாகம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது போல் 2 வது பாகமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்களை இயக்க ஏ.ஆர். முருகதாஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.

சல்மான் கானுக்கு வந்த கொலைமிரட்டல்

இந்த நிலையில், தற்போது சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், சல்மானின் நெருங்கிய நண்பரும், மகராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தின் பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 1988 ஆம் ஆண்டு ராஜஸ்ஹானில் ஒரு பட ஷூட்டிங்கின்போது சல்மான் கான் அரியவகை மானை வேட்டையாடி சர்ச்சையில் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மானை புனிதமாகக் கருதி வரும் பிஷ்னோய் இன மக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதில், சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என இல்லை என்றால் கொல்லப்படுவார் என லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்திருந்தார். அதேபோல், சமீபத்தில் ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் சல்மான் கான் கொல்லப்படுவார் என மகாராஷ்டிரய போக்குவரத்துறை வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சல்மான் கானுக்கு பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது பந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுவெளியில் பவுன்சன்கள் பாதுகாப்பில் செல்லும் அவர் சில நாட்களாக வெளியில் நடமாடவில்லை.வெளியில் செல்வதற்கு துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த குண்டுதுளைக்காத காரில்தான் செல்வதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சிக்கந்தர் படத்தில் சல்மான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் இருக்கும் நிலையில் பாபா சித்திக் கொல்லப்பட்தை சல்மான் கானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த பாதிப்பில் இருந்து அவர் வெளிவரவில்லை. அதனால் இப்பட ஷுட்டிங்கில் சல்மான் கலந்துகொள்ளவில்லை எனவும், தாராவி மாதிரி ஒரு பெரிய செட்டிங் போடப்பட்ட இடத்தில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் உள்பட மொத்த படக்குழுவும் அங்கிருக்க, ’கொலை மிரட்டலால் ஷூட்டிங்கிற்கு சல்மான் கான் வரவில்லை என்பதால் ஏ. ஆர். ஏமுருகதாஸ் சென்னைக்கு திரும்பிவிட்டு, சில நாட்களுக்கு பின் மீண்டும் மும்பை சென்று ஷூட்டிங் நடத்தவிருப்பதாவும், இப்போதைக்கு ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டால் இது ஏ.ஆர். முருகதாஸூக்கு பின்னடைவாக மாறலாம்’’ எனக் கூறப்பட்டது.

சல்மான் கான் தரப்பு விளக்கம்

இந்த நிலையில், சல்மான் கான் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகிறது. அதன்படி, ’’பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்புடன் பங்கேற்ற சல்மான் கான், சிக்கந்தர் பட ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, தீபாவளி வரை அவர் அப்பட ஷூட்டிங்கில் பங்கேற்பார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார், தர்பார் என ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்று, அவர் விஜய்யை வைத்து இயக்கவிருந்த படம் கதை சரியில்லாததால் அவரை நிராகரித்து, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தன்னை நிரூபிக்க முருகதாஸ் முயற்சித்து வரும் நிலையில் சல்மானுக்கு பிரச்சனை ஏற்பட்டு பட ஷூட்டிங் நடக்குமா? எனக் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இச்சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிக்கந்தர் படப்பிடிப்பில் சல்மான் கான் கலந்துகொண்டிருப்பதாக வெளியாகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விரையில் இப்பட அப்டேட் வெளியாகும் எனவும் இப்படம் இந்தியில் வெளியான கஜினி மாதிரி சூப்பர் ஹிட்டாகும் எனவும், இதன் பின் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் முன்னணி இயக்குனராக வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News