Connect with us

Cinemapettai

பறிபோன பட வாய்ப்பால் உச்சகட்ட கோபத்தில் ஏ ஆர் முருகதாஸ்.. கண்டுகொள்ளாத தளபதி!

vijay-murugadass-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பறிபோன பட வாய்ப்பால் உச்சகட்ட கோபத்தில் ஏ ஆர் முருகதாஸ்.. கண்டுகொள்ளாத தளபதி!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுக்கும், விஜய்க்கும் இடையேயான நட்பு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தனர்.

மேலும் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால் சில காரணங்களால் ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.

சமீபத்தில் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான நெல்சன், தளபதியின் 65 வது படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் விஜய்யின் 65வது படம் குறித்த அறிவிப்புகள் வெளியான பிறகு திரையுலகில் உள்ள பலரும் விஜய்யின் புதிய படத்திற்கும், விஜய்யை இயக்க வாய்ப்பு கிடைத்த இளம் இயக்குனரான நெல்சனுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்  எந்தவித வாழ்த்துக்களையும் இந்த புதிய குழுவினருக்கு தெரிவிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது விஜய்யை இந்த சிறு வயதிலேயே இயக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக நெல்சனுக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை இணையத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், விஜயுடன் நெருங்கிய பழக்கம்கொண்ட ஏ ஆர் முருகதாஸ் இதுவரை விஜய்கோ, ‘தளபதி 65’ குழுவினருக்கோ எந்தவித வாழ்த்துக்களையும் தெரிவிக்கவில்லையாம்.

vijay-ar-murugadass-cinemapettai

இதற்குக் காரணம், விஜய்யை இயக்க கிடைத்த வாய்ப்பு பறிபோனது தான் என்று பரவலாக பேசப்படுகிறது. இதனால் முருகதாஸ் கோபமாக  இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, இது உண்மையா? இல்லையா? என்ற ஆராய்ச்சியில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top