Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆம்! சர்கார் கதை என்னுடையது அல்ல.. ஒப்புக்கொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் படத்தின் பிரச்சினை ஒருவழியாக முடியுமா? என்று பயந்து கொண்டே இருந்தனர் விஜய் ரசிகர்கள். வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் எழுத்தாளர் சங்கத்தில் 2007ம் ஆண்டு கதையை பதிவு செய்திருந்தார். இந்த கதை பிரச்சினையில் அவரும் விடுவதாக இல்லை எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்து முறையிட்டார். கே.பாக்யராஜ் அவர்களும் ஒரு எழுத்தாளர் அல்லவா அதனால் வருண் இராஜேந்திரன் விவகாரத்தை சீக்கிரமாக முடிவு கட்டினார்.
கே.பாக்யராஜ் அவர்களும் ஏ.ஆர் முருகதாசை கூப்பிட்டு சமாதானம் பேசினார். ஆனால் ஏ.ஆர் முருகதாஸ் விடுவதாக இல்லை இது என்னுடைய கதைதான் இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினார். கோர்ட்டுக்கு சென்றது ஆனால் கதை விவகாரம் முருகதாசுக்கு சாதகமாக இல்லை என உணர்ந்து வேறு ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பிரச்சினையை வைத்து கே.பாக்யராஜ் அவர்களும் விளக்கம் தருகிறேன் என்று மொத்த கதையையும் கூறிவிட்டார். இனிமேலும் இது தொடர்ந்தால் முழு படத்தையும் எல்லாருக்கும் திரையிட்டு காண்பிக்க சொல்வார்கள் என சமாதான பேசுமாறு தயாரிப்பாளர்கள் அறிவுரை சொல்லி உள்ளனர்.
உதவி இயக்குனர் ராஜேந்திரன் தன்னுடைய பெயர் திரையில் வரவேண்டும் என்றும் 30 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். முருகதாஸ் ஒருவழியாக ஒப்புக்கொண்டார். கதை என்னுடையதல்ல அவருக்கு வரவேண்டியதை நான் செலுத்தி விடுகிறேன் என்று பஞ்சாயத்து சமரசம் பேசி ஒப்புக்கொண்டார். இதனால் சர்கார் படம் சொன்ன தேதியில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாவது உறுதி.

SARKAR
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எழுத்தாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று கே.பாக்யராஜ் அவர்கள் சந்தித்த முதல் பிரச்சினை இதுதான் அதிலும் வெற்றி பெற்றுள்ளார். இனிமேலும் இந்த திருட்டு கதை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புகிறோம். அட்லி இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
