100 நாட்களை தாண்டி வெற்றி பெற்ற ஏஆர் முருகதாஸ் 5 படங்கள்.. ஒன்னு ஒன்னும் வேற ராகம்.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஏஆர் முருகதாஸ் ஒருவர். இவருடைய திரைப்படங்கள் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களாக இருக்கும். ஏ ஆர் முருகதாஸ் இன் 100 நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்.

ரமணா: 2002ஆம் ஆண்டு வெளியான ரமணா திரைப்படம் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு போன்றவற்றை வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ரமணா. இதில் விஜயகாந்த் பேசிய வசனங்கள் இப்போதும் மீம்ஸ்களில் டெம்ப்ளேட் ஆக வைக்கப்படுகிறது.

கஜினி: கஜினி திரைப்படத்தில் சூர்யா ஷார்ட் டைம் மெமரி லாஸ் நோயாளியாக இருப்பார். எதையும் பயந்து நிமிடம் மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்ளும் விசித்திரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின்,நயன்தாரா நடித்து இருப்பார்கள். இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே ஹிட். இப்படம் பாலிவுட்டிலும் அமீர்கான் நடிப்பில் எடுக்கப்பட்டது.

7ஆம் அறிவு: 7ஆம் அறிவு படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒருவர் மூலம் பலருக்கும் பரவும் வைரஸ் தொற்று. அதை தடுக்க வழி தெரியாமல் அரசு திணறும். போதிதர்மர் அதற்கான வைரஸை அழிப்பதற்கான வழியை காட்டுவார். அப்போது இந்தப் படம் 100நாள் தாண்டி ஹிட் படமாக இருந்தது. இந்த கொரோனா காலகட்டத்தில் இதை முன்பே அறிந்து ஏழாம் அறிவு படம் எடுக்கப்பட்டுள்ள முருகதாஸ் என பலராலும் பேசப்பட்டது.

துப்பாக்கி: விஜய், காஜல் அகர்வால் நடித்து 2012ல் வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தின் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் டெரரிஸ்ட் கேங்க் மற்றும் ஸ்லீப்பர் செல்ஸ் என்று பயங்கரவாதிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால்க்கு பாராட்டுக்கள் குவிந்தது.விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

thupakki-vijay
thupakki-vijay

கத்தி: 2014 ஆம் ஆண்டு மீண்டும் முருகதாஸ்,விஜய் கூட்டணியில் தீபாவளி அன்று வெளிவந்த படம் கத்தி. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். கார்ப்பரேட் நிறுவனங்களால் தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்து வருவதை இப்படத்தில் துணிச்சலோடு கத்தி கேட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்