Connect with us

Cinemapettai

மண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

மண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.

DC காமிக்ஸ்

காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகியுள்ளது இப்படம். இதற்கு முன் பேட்மேன் vs சூப்பர்மேன் (2016 ) மற்றும் ஜஸ்டிஸ் லீக்கில் (2017 ) தோன்றியுள்ள அக்வாமேன் கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து வெளியாகும் முதல் படம்.

aquaman

கடந்த சில ஆண்டுகளாகவே, தங்களின் படைப்பை புதிப்பித்துக்கொண்டே வருகின்றது டி சி காமிக்ஸ். அந்த வரிசையில் தான் இப்படமும். முழுக்க முழுக்க அக்வாமேன் ஆக நடித்துள்ள “ஜேசன் மொமா” மற்றும் கான்ஜுரிங் , பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் புகழ் இயக்குனர் “ஜேம்ஸ் வான்” நம்பி களம் இறங்கியுள்ளனர்.

கதை

முதல் பார்ட் என்பதால், ஹீரோ பிறப்பதற்கு முன் இருந்து ஆர்மபிக்கிறது கதை. எவ்வாறு குயின் அட்லான்ட்டா திருமணத்தில் இருந்து தப்பிக்க ஓடி வருகிறாள். நிலத்தில் ஒருவனுடன் காதல் வசப்பட்ட பின் உருவாகிறது குழந்தை ஆர்தர் கர்ரி. தாய் பிரிந்து மீண்டும் அட்லாண்டா செல்ல, அவளின் நெருங்கிய விசுவாசி நுயிடிஸ் வல்கோ இவனுக்கு பயிற்சி அளிக்க, இவனும் அக்வாமேன் ஆக மாறுகிறான்.
இன்றைய தினத்தில் ராஜாவாக இருக்கும் கிங் ஓர்ம் மொத்தம் உள்ள 7 ராஜாக்களின், அதிக நபர்களின் ஆதரவை பெற்று பூலோக வாசிகளை தன் பிடியில் கொண்டு வர துடிக்கிறான்.

Aquaman

இந்நிலையில் தான் நம் ஹீரோ அட்லானாட செல்கிறார், தன் தம்பியை எதிர்க்கிறார். தன் தாத்தாவின் சக்தி வாய்ந்த ட்ரிடென்ட் தேடி பிரின்சஸ் மேரா ( தம்பி ஓரமிற்கு நிச்சயம் ஆனவள்) உடன் செல்கிறார். அதனை கண்டு பிடித்தாரா, கடலில் நடக்கும் யுத்தத்தை தடுத்து பூமியை காத்தாரா, தன் தாயை மீண்டும் சந்தித்தாரா என்பதே மீதி கதை.

பிளஸ்

கிராபிக்ஸ், பின்னணி இசை, ஜேசன் மொமா

மைனஸ்

படத்தில் நீளம், தொய்வான கதை, திரைக்கதை

சினிமாப்பாட்டை அலசல்


கதை என்று பார்த்தல் ராஜ்ஜியம் யாருக்கு என நல்ல எண்ணம் கொண்ட ஹீரோ அண்ணனுக்கும் , கெட்ட எண்ணம் உடைய வில்லன் தம்பிக்கும் நடக்கும் தர்மயுத்தம் படம். முடிவு யார் பக்கம் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தே.
ஜேம்ஸ் வானிடம் படம் சென்றதால் மேக்கிங்கில் அந்த பிரம்மாண்டம் தெரிகிறது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் இருந்தும், படத்தில் உள்ள நம்பகத்தன்மை நம்மை வாய் பிளக்க வைக்கிறது. செண்டிமெண்ட், மாஸ் ஆக்ஷன், சில இடங்களில் காமெடி என அசத்தியுள்ளார் கதை அமைப்பில்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

வெறித்தனமான காமிக்ஸ் பிரியர்களுக்கு சிறிய ஏமாற்றத்தையே கொடுக்கும் இப்படம். எனினும் சினிமா பிரியர்களுக்கு அசத்தல் திரைக்கொண்டாட்டம் இப்படம். மார்வெல் போலவே திரைப்படங்களில் டி சி காமிக்ஸும் அடுத்த லெவெலுக்கு சென்று விட்டது என்பதற்கு இப்படம் உதாரணம்.

ஒண்டர் ஒமன் தொடர்ந்து அடுத்த ஜாக் பாட் இப்படம் என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் அள்ளும் இப்படம்.

ரசிகர்களின் மனதை கவரும் அசத்தல் சுனாமியாகவே உருவெடுத்துள்ளான் இந்த அக்வாமேன்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3.75 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top