Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அப்புக்குட்டி. இயக்குனர் சசிகுமார் வெளியிட்ட தலைப்பு, டைட்டில் லுக் போஸ்டர்.
Published on

அப்புக்குட்டி
சிவபாலன் என்பதை விட அப்புக்குட்டி என்ற பெயர் தான் பலருக்கு பரிச்சயம். ஏற்கனவே மனிதர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். படமும் நல்ல ஹிட், தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் காமெடி ரோல்களில் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
வாழ்க விவசாயி
இந்நிலையில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அப்புக்குட்டி. போராட்ட குணம் கொண்ட விவசாயியின் கதாபாத்திரம் இவருடையது. ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். பி.எல்.பொன்னி மோகன் இயக்குகிறார். ஜெய் கிருஷ் இசை அமைக்கிறார். இரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vaazhka Vivasayi – Appukkutty
இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் சசிகுமார் நேற்று வெளியிட்டார்.
