அப்புக்குட்டி என்று அறியப்படும் சிவபாலன்  திரைப்பட நடிகர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடித்ததன் மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது

அப்புக்குட்டி ஏகப்பட்ட ரீடேக் வாங்கியதால், அவருடன் நடித்த ஹீரோக்கள் அப்செட்டாகி இருக்கின்றனர்.

Appukutty

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோவாக விக்ராந்த் நடித்துள்ளார். தெலுங்குப் படங்களில் நடித்துவந்த மெஹ்ரீன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பல படங்களில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்த ஆண்டனி, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகும் முதல் நேரடி தெலுங்குப் படம் இதுதான். நவம்பர் 10ஆம் தேதி இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகிறது.

nenjil-thunivirunthal

சூரி, அப்புக்குட்டி ஆகியோரும் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில், ‘எச்சச்ச எச்சச்சா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. பெண்களை உயர்வாக மதித்து பாடப்படும் இந்தப் பாடல், குத்துப்பாடல் போல உருவாகியுள்ளது.

இந்தப் பாடலை, இரவு நேரத்தில் படமாக்கியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கியதால், இந்தப் பாடலைப் படம்பிடிக்க 5 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ளது.

AjithKumar appukutty
appukutty

தமிழ், தெலுங்கு என மாற்றி மாற்றி படம் பிடிக்கப்பட்டதால், சந்தீப் மற்றும் விக்ராந்த் இருவரும் சோர்வடைந்துள்ளனர். மேலும், இரவில் படமாக்கப்பட்டதால் சோர்வு அதிகமாக இருந்திருக்கிறது.

இந்த நேரத்தில், பாடலின் இடையிடையே அவ்வப்போது ஆடிய அப்புக்குட்டி, ஒரு காட்சியில் 15 முறை ரீடேக் வாங்கியிருக்கிறார். இதனால், ஹீரோக்கள் பயங்கரமாக அப்செட் ஆகியிருக்கின்றனர்.

இருந்தாலும், அவர்களை உற்சாகப்படுத்தி அந்தப் பாடலை எடுத்து முடித்திருக்கிறார் சுசீந்திரன்.