ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி. தொழில் நுட்ப உலகில் முன்னணியாக தடம் பத்திதுக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது புத்துய அறிமுகங்களை அறிவித்துள்ளது.

அதன்படி மொபைல் போனில் தனது புதிய வரவுகளான ஐபோன் 8 மற்றும்8 பிளஸ் போன் மாடல்களை வெளியிட்டுள்ளது.

இதே போல் அதீத தொழில் நுட்பம் கொண்ட 4K தொலைக்காட்சியை வெளியிட்டுள்ளது. இதன் பிரத்யேக திரை மற்றும் தொழில் நுட்பம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

3 சீரிஸ் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த வாட்ச் மூலம் இதய துடிப்பை நுட்பமாக கண்காணிக்க முடியுமாம். மேலும் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பாடல்கள் கேட்கலாம் என்று அறிமுக விழாவில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த அறிவிப்புகள் ஐபோன் ரசிகர்களிடம் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.