ஆப்பிள் நிறுவனம் புதியதாக தயாரித்து வரும் ஐஃபோன் 7எஸ், 7 எஸ் பிளஸ் மற்றும் ஐஃபோன் 8 ஆகியவற்றின் மாதிரி புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

ஐஃபோன் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் ஐஃபோன் 6எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இதையடுத்து, ஐஃபோன் 7எஸ், 7 எஸ் பிளஸ் மற்றும் ஐஃபோன் 8 ஆகிய புதிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை மேற்கொண்டுள்ளது.
இவை அடுத்த தலைமுறையின் வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என, ஆப்பிள் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐஃபோன் 7எஸ், 7எஸ் பிளஸ் மற்றும் ஐஃபோன் 8 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களின் வடிவமைப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில், ஐஃபோன் 8 மிகவும் நீளமானதாக உள்ளது. 7 எஸ் மற்றும் 7எஸ் பிளஸ் ஆகிய ஐஃபோன்கள், இதற்கு முன்வெளிவந்த ஐஃபோன்கள் வடிவத்தைப் பின்பற்றியே உள்ளது.

இந்த ஐஃபோன்கள், இதுவரை தயாரிக்கப்பட்ட ஐஃபோன்களைவிடவும், புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாகவும், ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்குப் புது அனுபவம் தரக்கூடியதாகவும் இருக்கும் என்று, ஆப்பிள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் முன்கூட்டியே, இவற்றின் மாதிரி புகைப்படங்கள் வெளியானதால், ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சியடைந்தும் உள்ளது.