Ipad2_cinemapettai

ஆப்பிள் ஐபேட் 4ம் தலைமுறை மாடல் உபயோகப்படுத்துவோர் தங்களது பழைய சாதனத்தை மாற்ற விரும்பினால் அதற்கு பதிலாக புதிய ஐபேட் ஏர் 2 வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனை வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் பெற முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஆப்பிள் ஐபேட் ஸ்டாக் இல்லாத காரணத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பை தெரிவிக்குமாறு ஆப்பிள் ஊழியர்களிடம் அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  தானும் கெட்டு நடிகையையும் கெடுத்த வெற்றி நடிகர்...

புதிய ஐபேட் ஏர் 2  கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டது. 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்ட இந்த சாதனத்தின் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பழைய சாதனத்தை வழங்கும் போது கூடுதல் மெமரியை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  விஷால் செயலால் கடுப்பான சிம்பு ரசிகர்கள் ?

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபேட் ஏர் 2 சாதனத்தில் 9.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 64-பிட் ஆப்பிள் கி9 சிப்செட், ஐஓஎஸ் 10 இயங்குதளம், 8 எம்பி பிரைமரி கேமரா, ஃபேஸ்டைம் எச்டி கேமரா, டச் ஐடி தொழில்நுட்பம் கொண்ட கைரேகை ஸ்கேனர், வை-பை, 4ஜி எல்டிஇ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.