தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் குழந்தைகளுக்கான படங்கள் வருகின்றது. அதுவும் குறிப்பாக சமீபகாலமாக பேய் படங்களின் வரிசையில் இருந்து கொஞ்சம் இடைவேளை விட்டு இந்த வாரம் குழந்தைகள் ஸ்பெஷலாக அப்பா படம் வந்துள்ளது.எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார்.

அதிகம் படித்தவை:  பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவரும் எங்கவீட்டு மாப்பிளை சுசானா.!

கதை 

ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் இருக்கும். அப்படிப்பட்ட மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை சமுத்திரக்கனி தன்னுடைய பாணியிலேயே வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் தான் இந்த அப்பா.

விமர்சனம் 

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிபேசும் போதும், தன் மகனிடம் அவனை ஊக்கப்படுத்த பேசும் வசனங்களின் போதும் கைதட்டல்கள் பறக்கிறது.தம்பி ராமையாவின் யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பு படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது.படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை சற்று யோசிக்க வைக்கின்றது.

அதிகம் படித்தவை:  எனது பாஸிடிவ் எனர்ஜி எப்பவுமே சல்மான் கான்தான்... நெகிழும் முன்னணி நடிகை

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பட்ஜெட் காரணமாக ஏதோ குறும்பட சாயல் போலவே உள்ளது, மற்றபடி ஏதுமில்லை.மொத்தத்தில் அப்பா அனைத்து அப்பாக்களும் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

ரைடிங் : 3.25/5