Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தன் வெற்றி படத்தை இரண்டாம் பாகமாக்கும் முன்னணி இயக்குனர்
பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி தனது வெற்றி படமான அப்பாவின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கே பாலசந்தரின் 100வது படமான பார்த்தாலே பரவசத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் சமுத்திரக்கனி. இதை தொடர்ந்து, பாலசந்தரின் மெகா தொடர்களான அரசி மற்றும் செல்வியிலும் பணியாற்றினார். இந்த அனுபவம் அவருக்கு புது ரூட்டை பிடித்து கொடுத்தது. இதை தொடர்ந்து, அவருக்கு மெகா ஹிட் படமான சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சமுத்திரக்கனியை நடிகனாக பலருக்கும் கொண்டு சென்றது. தொடர்ந்து, அவர் இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறியப்பட்டார். தொடர்ந்து, பல படங்களை இயக்கும் வாய்ப்பும் அதே வேளையில் நடிகராகவும் தனி முத்திரை பதித்தார்.
சமீபத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக செம கதாபாத்திரத்தை செய்து அப்ளாஸ் வாங்கியவர். தன் முதல் படமான நாடோடிகளின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தை ஏற்று இருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. இந்நிலையில், சமுத்திரக்கனி அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக அறிவித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார்.
இப்பாகத்தில் அதே சிறுவர்கள் கல்லூரியில் சந்திக்கும் பிரச்சனையை கதை பின்னணியாக அமைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேடல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பாகத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, நமோ நாராயணா நடிப்பில் 2016ம் இப்படம் வெளியாகியது. கேப்ரியல்லா சார்ல்டன், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
