முதல்வர் உடல் நிலை குறித்து வதந்தி பரவிவருவதால் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றி 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுக்காப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்லவும், வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் ‘சமூக வலைதளங்கள் அனைத்தும் காவல் துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தற்போது தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்கையில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதலவர் உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருவதால் அசம்பாவித் அச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் சமார் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து கடலூர் காந்தி நகரை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் இந்த அதிர்ச்சியில் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.