Tamil Cinema News | சினிமா செய்திகள்
தியேட்டர் vs OTT- சூரரை போற்று புகழ் அபர்ணாவுக்கு பிடித்தது எது தெரியுமா
அபர்ணா பாலமுரளி – கேரளாவை சேர்ந்தவர். அப்பா இசை அமைப்பாளர், அம்மா வக்கீல் மற்றும் பின்னணி பாடகி. இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர். அதுமட்டுமன்றி கட்டிடக்கலை துறையில் டிகிரி முடித்தவர். மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். நம் கோலிவுட்டில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
இது வரை குறைந்த பட்ஜெட் படங்களில் அடக்கமான ரோல்களில் நடித்தவர். சூரரை போற்று படத்தில் இவர் தான் ஹீரோயின் என்ற அறிவிப்பு வந்த நேரத்தில் ஏகப்பட்ட சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். ஆனால் படம் வந்த பின் தாறுமாறாக நடித்திருப்பது தெரியவந்தது. தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.
இவர் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் “படம் திரை அரங்கில் ரிலீஸ் ஆகுமென நினைத்து இருப்பீர்கள், ஆனால் OTT தளத்தில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?” என கேட்டனர்.
அதற்கு, “முற்றிலும் மாறுபட்ட அனுபவம். திரை அரங்கம் செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மணிநேரம், படம் பார்க்க என முடிவு செய்வோம். ஆனால் செல் போன், டிவி எனும் பட்சத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம். இது வித்யாசமான அனுபவம், அனால் திரை அரங்க ரிலீஸ் என்ற கொண்டாட்டத்தை நான் கட்டாயம் மிஸ் செய்கிறேன்.” என பதில் தந்துள்ளார்.

soorarai-pottru-cinemapettai
