fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

செல்வராகவனே அசந்து போய் பகிர்ந்த ஆயிரத்தில் ஒருவன் 2 fan made போஸ்டர்- வேற லெவலில் தனுஷ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்வராகவனே அசந்து போய் பகிர்ந்த ஆயிரத்தில் ஒருவன் 2 fan made போஸ்டர்- வேற லெவலில் தனுஷ்

கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் மற்றும் ஹீரோ தான் செல்வராகவன் மற்றும் தனுஷ். இந்த அண்ணன் தம்பி காம்போ எப்பொழுது இணைவார்கள் என கோலிவுட்டே ஏங்கி கொண்டுதான் இருக்கிறது. புதுப்பேட்டை 2 ஸ்க்ரிப்டில் செல்வா உழைக்க ஆரம்பித்ததும் அனைவரும் கொண்டாடினார். இந்நிலையில் செல்வா மற்றும் தனுஷ் இணையும் படம் விரைவில் வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி இரண்டு படத்தின் அப்டேட்டை வெளியிட்டனர்.

செல்வராகவனின் 12வது படத்தின் ஷூட்டிங் ஆரம்பிதித்தது நேற்று. கலைப்புலி தாணு தயாரிக்கிறார். தன் வழக்கமான டீமுடன் இணைந்து விட்டார் செல்வா. இது போக ஆயிரத்தில் ஒருவன் 2 2024 இல் ரிலீசாகும், தனுஷ் தான் நடிக்கிறார் என்ற அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது.

ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் தனுஷ் தான் பார்த்திபன் ரோலில் சோழ மன்னனாக நடித்திருக்கவேண்டியது, எனினும் அது மிஸ் ஆனது. இந்நிலையில் கிளைமாக்ஸ் முடிவில் கார்த்தி கூட்டி சென்ற இளவரசன் ரோலில் தொடர்ந்து தனுஷ் நடிப்பது போன்று தான் கதை இருக்கும் என அனைவரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் இயக்குனர் மற்றும் ஹீரோவை டேக் செய்து போஸ்டர் ஒன்றை பகிர்ந்தனர். இந்த போஸ்டர் செல்வாவுக்கு மிகவும் பிடித்து போக சூப்பர் என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

AO 2 fan made poster

இந்த போஸ்டர் லைக்ஸ் குவித்து வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top