நடிகைகளுக்கு என்ன கவலை சினிமாவில் படங்களில் நடித்து ஜாலியாக இருக்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் ஒவ்வொரு நடிகைக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் வருகிறது சினிமாவால்.

அப்படி தற்போது பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர் ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் நடித்திருக்கும் நடிகை சாயிஷா.

சாயிஷாவின் கால்ஷீட் வாங்கி தருகிறேன் என்றும் நான் தான் அவருடைய மேனேஜர் என்றும் ஒருசிலர் கூறி அவர் பெயரை முறைகேடாக பயன்படுத்துவதாக கூறப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சாயிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ், தெலுங்கு படத்தில் நடிக்கவும், மற்ற காரணங்களுக்கும் என்னை அல்லது எனது தாயாரை நேரடியாக தொடர்பு கொள்ளவும் என்றும், தனக்கென மேனேஜர் என்று யாரும் இல்லை என்றும் அவர் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.