சமீபத்தில் ராடன் நிறுவன மேலாளருடன் நடுத்தெருவில் வைத்து சண்டையிட்ட நடிகை சபீதா ராய், தனக்கு நேர்ந்த கொடுமை மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ராடன் நிறுவன மேலாளர் சுகுமாறனுடன் நடிகை சபீதா ராய் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும், அவருடைய மனைவி இல்லாத நேரத்தில் இரண்டு நாட்கள் சுகுமாறனுடன் சபீதா தங்கியிருந்தபோது, இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில், ஒருவரையாருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால், நான் அங்கு சென்றது உண்மை என்றும் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டது எனக்கூறப்படுவதும் முற்றிலும் பொய்யானது.

பணம் தொடர்பாக எங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனைதானே தவிர கள்ளக்காதல் கிடையாது, இதை வேண்டுமென்றே சித்தரித்து வெளியிட்டுள்ளார்கள் என சபீதா கூறியுள்ளார்.

மேலும், இப்படி ஒரு வீடியோ வெளியானவுடன் மானமுள்ள எந்த ஒரு பெண்ணும் தற்கொலை செய்துகொள்வார். ஆனால் என்னை நம்பி எனது அம்மா இருப்பதால் என்னால் அப்படி செய்ய இயலவில்லை.

வழக்கு தொடரவேண்டியது தானே என பல பேர் என்னிடம் கேட்டார்கள், ஆனால் அந்த அளவுக்கு பொருளாதார வசதியற்றவள் நான் என்றும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு யாரும் எனக்கு கால் செய்து தொந்தரவு பண்ணாதீர்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.