ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல்.28ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

உலகமே காத்திருக்கும் படமாக உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் அவ்வப்போது இணைய தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘பாகுபலி-2’ படத்தில் அனுஷ்காவின் அழகிய போஸ்டர் ஒன்று வைரலாக பரவி கொண்டிருக்கிறது .

அதோடு இன்னொரு செய்தியும் பரவுகிறது.கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பாகுபலி ஒன்று, இரண்டு படங்களுக்காக ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்தார்கள். எல்லோரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்,ஊழியர்கள் என்பதையெல்லாம் மறந்து உறவுகளாக மாறி இருந்தனர்.

குறிப்பாக ஊட்டியில் செட் போட்டு சூட்டிங் நடந்த போதுதான் மிகவும் ஒருவரையொருவர் நெருங்கி வாழ்ந்திருகிரார்கள். லைட்மேன், பைட்டர்ஸ்  நடனப் பெண்கள் என்கிற பேதமே இல்லாமல் குடும்ப உறவுகளைப் போல பாசத்தில் திளைத்தார்களாம்.

சூட்டிங் கடைசி நாளன்று அனுஷ்கா அத்தனை பேருக்கும்  விருந்து கொடுத்தாராம் அதில் தான் கதறி அழுதிருக்கிறார். இனி நாம் பிரியப் போகிறோம் என்று பேசி வார்த்தைகளை முடிக்க முடியாமல் கதறி அழ , ஹீரோ பிரபாஸ்  மற்றும் அனைவருமே அழுதிருக்கிறார்கள்.

அன்று இரவு முழுக்க மனநிலை கலங்கிய படியே இருந்த அனுஷ்கா அடுத்த நாள் யாரிடமும் சொல்லி விட்டு போக தையிரியம் இல்லாமல் அப்படியே காரில் ஏறிப் போய் விட்டார் என்கிறார்கள்.

செய்தி  கேட்ட நமக்கே கலங்கியது.