Tamil Cinema News | சினிமா செய்திகள்
அனுஷ்காவின் அதிரடி ப்ளான்.. அடிவயிறு கலக்கத்தில் நயன்தாரா!
நயன்தாரா என்ற மலையாள நடிகைக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமாக வளர்ந்து வந்தவர் ஆந்திர அழகி அனுஷ்கா ஷெட்டி. முதலில் மாதவன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ரெண்டு படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் இடம்பெற்ற மொபைலா மொபைலா என்ற பாடலில் அநியாயத்திற்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு தமிழக ரசிகர்கள் கண்களைக் குளிர வைத்தார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் வேட்டைக்காரன் என்ற படத்தில் நடித்தார்.
ஆரடி ஆப்பிளாக அனைவரையும் கவர்ந்த அனுஷ்கா ஷர்மா அதனைத் தொடர்ந்து அருந்ததி படத்தின் மூலம் தனி ஒரு நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகி மையப்படுத்தி எடுக்கும் படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்பதை நிரூபித்தார்.
இப்போது யார் வேண்டுமானாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கலாம். ஆனால் அதற்கு விதை போட்டவர் அனுஷ்காதான். அப்படி கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையைக் கூட்டி ஹீரோக்களுக்கு இணையாக நடித்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. மேலும் நினைத்த அளவுக்கு அனுஷ்காவால் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் சினிமாவிலும் அவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. இந்த கேப்பை பயன்படுத்தி நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக மாறிவிட்டார்.
பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என தற்போது 2021 ஆம் ஆண்டு தமிழில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா. மேலும் அடுத்தடுத்து அதிரடி காட்டி மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடித்தே ஆகவேண்டும் என முடிவு செய்துவிட்டாராம்.

anushka-nayanthara-cinemapettai
ரசிகர்கள் எதிர்பார்த்த கவர்ச்சி தரிசனமும் அவ்வப்போது வழங்க உள்ளாராம். இதனால் தற்போது அனுஷ்காவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இனி சமூக வலைதளங்களில் அனுஷ்கா பற்றிய அருமை பெருமைகளை அடிக்கடி பார்க்கலாம்.
