இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உண்மையிலேயே குண்டு பெண்ணாக மாறி நடித்த அனுஷ்கா, பாகுபலி படத்தில் ஒல்லியாக அழகுப் பதுமையாக தோன்றினார். இதன் பின்புலத்தில் கிராபிக்ஸ் விளையாடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படத்தின்போது அனுஷ்காவை உடல் எடையை குறைக்க சொல்லி இயக்குனர் கேட்டுக்கொண்டார். ஆனால் ஒரு யோகா ஆசிரியராக இருந்தும் அனுஷ்காவால் உடல் எடையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்று ரூ.5 கோடி செலவு செய்து அனுஷ்காவை கிராபிக்ஸ் மூலம் ஒல்லியாக்கினார் இயக்குனர் ராஜமெளலி.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கின்றார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபாசுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவை இயக்குனர் சுஜித் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்றும், பாகுபலி படக்குழுவினர் போல தன்னால் ரூ.5 கோடி செலவு செய்ய முடியாது என்றும் கறாராக கூறிவிட்டாராம்

இதனால் வேறு வழியின்றி தற்போது உடல் எடையை குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அனுஷ்கா. அனேகமாக அவர் சர்ஜரி செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.