அனுஷ்கா இன்று ஹீரோக்களுக்கு நிகராக கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் இந்தியாவே எதிர்ப்பார்க்கும் பாகுபலி இரண்டாம் பாகம் வருகின்றது.

இந்த பாகத்தில் அனுஷ்காவிற்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகின்றது, இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதற்காக சென்னை வந்த அனுஷ்கா இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் பேசும் போது ‘நான் நடிக்க வந்த போது எனக்கு எது நல்ல கதாபாத்திரம் என்றே தெரியாது.

அருந்ததிக்கு பிறகு தான் நல்ல கதைகளாக தேடி நடித்தேன், அப்போது பலரும் என்னிடம் வேதம் (தமிழில் சிம்பு நடித்த வானம்) படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஏனெனில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்தால் என் பெயர் கெட்டுவிடும் என்றார்கள்.

ஆனால், பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்தாலும், அது மிகவும் அழுத்தமான கதாபாத்திரம், அதனாலேயே நடிக்க சம்மதித்தேன்’ என கூறியுள்ளார்.