இந்தியாவின் ஹாட் ஜோடி என்றால் அது இந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான். கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள், புரளிகள் எழுந்து வந்தன. இந்நிலையில் கோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

virat anushka

மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடும் இந்திய கேப்டன் கோலியுடன் அனுஷ்காவும் சென்றார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய வந்து தன் சினிமா வேளைகளில் பிஸியாகி விட்டார் அனுஷ்கா சர்மா.

தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, ஒரு நாள் போட்டியில், தனது 33 ஆவது சதத்தை அடித்தார்.

Virat Kohli

இந்நிலையில், இந்த சத்தத்தால், ஆட்டநாயகன் விருதையும் வாங்கினார் கோலி. தனது சந்தோஷத்தை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பதிவிட்டார் . கோலி பேட்டிங் செய்யும் புகைப்படம், அவர் சதம் அடித்த தருணம், இந்தியா வெற்றி பெற்ற அறிவிப்பு இந்த மூன்றையும் புகைப்படங்களாக அனுஷ்கா பதிவிட்டிருந்தார்.

anushka-sharma-instagram-story

அத்துடன், “வாட் ஏ கய்” என்று அனுஷ்கா கோலியைப் புகழ்ந்தார், அன்பின் வெளிப்பாடாக ஹார்ட்; குறியீட்டை பதித்து புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதுவே கோலி தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் போட்டிகளில் அடிக்கும் முதல் சத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.