அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பை கேட்டு வாய் பிளந்த பாலிவுட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் அனுஷ்கா சர்மா. ஷாருக்கான் ஜோடியாக நடித்த இப்படத்தின் வசூல் பெருமளவில் அமைந்தது. இது பாலிவுட்டில் அனுஷ்காவிற்கு ஒரு இடத்தை உருவாக்க எதுவாக அமைந்தது. தொடர்ச்சியாக இந்தியில் பல வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுஷ்கா, பலமுறை பிலிம்பேர் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பரி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் புரோசித் ராய் இயக்கியிருந்தார்.

அனுஷ்காவே தயாரித்து இருந்த இப்படம் பன்மடங்கு வசூலை அவருக்கு பெற்று தந்தது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது திகழும் அனுஷ்கா, விராட் கோலிவுயுடன் நீண்ட நாள் காதலில் இருந்தார். இவரின் ராசி விராட்டிற்கு சரியாக அமையவில்லை என பல கேலி கிண்டல் பேச்சுகள் அனுஷ்காவை வட்டம் அடித்த போதிலும், அவருக்கு பக்கம் பலமாக இருந்தது விராட் தான். இதை தொடர்ந்து, கடந்த வருடம் இத்தாலியில் நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இவர்கள் திருமணம் நடைபெற்றது. மும்பையில் குடியிருக்க நட்சத்திர தம்பதி ஒரு பெரிய மாளிகையை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். அதன் விலை மட்டும் 34 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

anushkasharma_cinemapettai
anushkasharma

இந்நிலையில், அனுஷ்காவின் தனிப்பட்ட சொத்து குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அனுஷ்காவின் மவுஸ் இன்னும் குறையவே இல்லை. ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடியும், விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறார். திருமணத்திற்கு முன்னதாக அனுஷ்கா மும்பையில் வசித்த வீட்டின் தற்போதைய மதிப்பு 9 கோடி ரூபாயாக கருதப்படுகிறது. இதன்மூலம், அவரின் மொத்த சொத்து ரூ.220 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. யம்மாடி!!!