fbpx
Connect with us

Cinemapettai

மிரட்டலனா புல்புல் திரை விமர்சனம்.. படம் பார்ப்பதற்கு முன்னாடி இத கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

India | இந்தியா

மிரட்டலனா புல்புல் திரை விமர்சனம்.. படம் பார்ப்பதற்கு முன்னாடி இத கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

Bulbbul review: அனுஷ்கா நடிப்பது மட்டுமன்றி படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே NH10, பாரி, போன்ற படங்களை தயாரித்து நடித்துள்ளார். அவர் தனது சகோதரர் கார்னேஷ் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் புல்புல். இப்படம் நேரடியாக நெட் பிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்ய தயாரிக்கப்பட்ட படம். இப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. பீரியட் ட்ராமாவான இப்படம் எப்படி இருக்கென்று வாங்க பார்க்கலாம்.

கதை – 1800களில் நடக்கும் கதைக்களம். பெரிய ஜமீன் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் மூத்தவர், மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டாமவன், கடைக்குட்டி சிறுவன்.

புல்புல் என்ற சிறுமிக்கு பால்ய விவாகம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவளை மூத்த சகோதரருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவள் தன் வயதே ஆன இளையவன் சத்யாவுடன் விளையாடுகிறாள். அவளுக்கு அவன் சூனியக்காரி ஒருவரின் கதையை சொல்கிறான். மிகவும் பிரசித்தி பெற்ற நாட்டுப்புற கதை அது.

20 வருடங்களுக்கு பிறகு, இங்கிலாந்தில் இருந்து வக்கீல் படிப்பு முடித்து வருகிறான் சத்யா. சூனியக்காரி ஊர் ஆண்களை கொடூரமாக கடித்து கொலை செய்யவதை பற்றி அறிகிறான். மூத்த சகோதரன் வீட்டை விட்டு வெளியேறிவிட, இரண்டாம் சகோதரனை சூனியக்காரி கொலை செய்ய, அண்ணி விதவையாகிறாள். இன்று அந்த மாளிகை மூத்த அண்ணி புல்புல் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒரு புறம் சூனியக்காரி கட்டுக்கதை, அது ஆசாமியின் வேலை என வேட்டையாட புறப்படுகிறான் சத்யா. மறுபுறம் டாக்டர் ஒருவருடன் புல்புல் நெருக்கமாக இருப்பதாய் கண்டு வேதனை அடைகிறான்.

இன்று நடப்பது மற்றும் 20 வருடங்களுக்கு முந்தைய பிளாஷ் பேக் என கட் ஆகி கட் ஆகி நகர்கிறது கதை. என்ன கொடுமைகளை அனுபவித்தாள் புல்புல், அதன் காரணத்தால் எவ்வாறு அவள் மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டது என நமக்கு காண்பிக்கிறார்கள். தவறு செய்யும் ஆண்களை அவள் தண்டிக்க எடுத்த உருவம் தான் என்ன என்பதனை மிகவும் அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குனர் அன்விதா தத்.

சினிமாபேட்டை அலசல் – OTT தளத்திற்கு ஏற்ற படம் தான் இது. முழுக்க முழுக்க ரெட் மற்றும் பிளாக் டோனில் உள்ளது படம். பிரிட்டிஷ் இந்தியா என்கின்றனர், எனினும் ஒரு வெள்ளையனையும் காமிக்கவில்லை. படம் முழுக்க செயற்கை தனமே மிஞ்சுகிறது. எளிதில் ஊகிக்கக்கூடிய வகையிலேயே உள்ளது திரைக்கதை.

பால்ய விவாகம், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள், ஆண்களின் தவறான சிந்தனை என பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது படம். ஆனாலும் நம்பகத்தன்மை என்பதில் அடி சறுக்கிவிடுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் –  மைனஸ் இருந்தும் படம் பெரிதும் போர் இல்லாமல் செல்கிறது. படம் சூப்பர், மோசம் என சொல்லமுடியாமல், சுமார்; ஒரு முறை பார்க்கலாம் என்றே நமக்கு தோன்றுகிறது.

லாக் டவுனில் பாப்கார்ன் கொரித்துக்கொண்டே பார்க்கலாம் இந்த புல்புல் செய்யும் மிரட்டல் லீலைகளை.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.5 \ 5

Continue Reading
To Top