கோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் டிசம்பர் 21 , 26 தேதிகளில் தில்லி, மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Virat Kholi – Anushka Sharma

மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடும் இந்திய கேப்டன் கோலியுடன் அனுஷ்காவும் சென்றார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய வந்து தன் சினிமா வேளைகளில் பிஸியாகி விட்டார் அனுஷ்கா சர்மா.

பாரி

அனுஷ்கா சர்மா தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் மூன்றாவது படம். திகில் படமாக உருவாகும் இதனை ப்ரோசிட் ராய் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். அநுபம் ராய் இசை.

அதிகம் படித்தவை:  22 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் சிறைச்சாலை பட கூட்டணி !
Pari FLP

அனுஷ்காவுடன் இணைந்து பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் மார்ச் 2 ரிலீசாகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை அனுஷ்கா தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

ஜனவரி 9 வெளியான அந்த மோஷன் போஸ்டர் உங்கள் பார்வைக்கு ..

அதிகம் படித்தவை:  செப்டம்பர் மாதத்தில் இத்தனை தமிழ் படங்களா வெளிவருகிறது.!!!

சினிமாப்பேட்டை கொசுறு நியூஸ்

PARMANU

இதே மார்ச் 2 நாளில் ஜான் ஆப்ரஹாம் நடித்திருக்கும் ‘பர்மானு: த ஸ்டோரி ஆஃப் பொக்ரான்’ படமும் வெளியாக இருந்தது. தற்பொழுது அந்த படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தமிழில் நயன்தாரா, தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டி, அந்த வரிசையில் ஹிந்தியில் அனுஷ்கா சர்மா என்று ஹீரோயினை முதன்மை படைத்தும் படங்களாக தான் இவரும் நடிப்பாரோ ?