ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் அதிகமாக வருகின்றன.

அந்த வரிசையில் இந்த ட்ரெண்டை அருந்ததி மூலம் திரும்ப தொடங்கி வைத்த அனுஷ்கா அடுத்து ஒரு தமிழ் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அக்கா தங்கை இருவருக்குமான பாசம், பிணைப்பு இவற்றோடு ஆக்‌ஷனும் உண்டாம். இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடிக்கவிருப்பது ரித்திகா சிங். ரித்திகா சிங் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டார். அனுஷ்கா மட்டும் கால்ஷீட் ஒதுக்குவதற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம்.