Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவுடன் ஜோடி சேர ஒரே கண்டிஷன் போட்ட அனுஷ்கா.. தலைசுற்றி நின்ற தயாரிப்பாளர்
நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை விருந்தாக வெளிவர இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
இதனை தொடர்ந்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், சூர்யா நடித்த வேல் திரைப்படத்தை போல் சுறுசுறுப்பாகவும் அதேநேரத்தில் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாகவும் இருக்கவேண்டுமென சூர்யா ஹரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்ய படக்குழு அக்கட தேசம் சென்றது. அங்கே அனுஷ்கா 15 கோடி சம்பளம் கேட்க பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்து விட்டது படக்குழு. இதனால் கீர்த்தி சுரேஷ் அல்லது நயன்தாராவை ஒப்பந்தம் செய்யலாமா என படக்குழு யோசித்து வருகிறது.
முன்னதாக சூர்யா நடித்த சிங்கம் 1, 2, 3 ஆகிய மூன்று படங்களிலும் அனுஷ்கா ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
