அஜித் நடிக்கவுள்ள ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் படக்குழுவினர் தற்போது நாயகியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா தான் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அனுஷ்கா இந்த படத்தில் கமிட் ஆக முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா ‘பாகுபலி 2’ உள்பட தற்போது நான்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருப்பதாகவும், ‘தல 57’ இயக்குனர் சிவா கேட்ட தேதிகளில் அனுஷ்காவின் கால்ஷீட் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுத்தை சிவாவின் அடுத்த பார்வை தற்போது காஜல் அகர்வால் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த செய்தி உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது