fbpx
Connect with us

Cinemapettai

ஒரே படத்தில் மற்ற நடிகைகளை அலறவிட்ட அனுஷ்கா.. OTT விலை கேட்டு அதிர்ந்த கோலிவுட்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே படத்தில் மற்ற நடிகைகளை அலறவிட்ட அனுஷ்கா.. OTT விலை கேட்டு அதிர்ந்த கோலிவுட்!

நடிகை அனுஷ்கா சமீபகாலமாக பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்களுக்கு எப்போதுமே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் இன்று இருக்கும் முன்னணி நடிகைகள் அனைவரும் தைரியமாக கதையின் நாயகியாக நடிப்பதற்கு அடித்தளம் போட்டவர் அனுஷ்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருந்ததி படமெல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா. தற்போது மீண்டும் கதையின் நாயகியாக அனுஷ்கா நடித்துள்ள படத்துக்கு மிகப் பெரிய விலை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ள செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சைலன்ஸ். ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் வெளியீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது அமேசான் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை கிட்டத்தட்ட 20 கோடி விலை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்களுக்கு இந்த விலையில் கால்வாசி கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கெட் இல்லாத நேரத்தில்கூட கெத்து காட்டும் அனுஷ்காவை பார்த்து அனைத்து நடிகைகளும் மிரண்டு விட்டனராம்.

Continue Reading
To Top