புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தலைவி ரிட்டர்ன்ஸ்! அனுஷ்காவை இனி யாராலும் தடுக்க முடியாது, அருந்ததி பாணியில் வெளியான போஸ்டர்

தென்னிந்திய திரையுலகில் குயின் என்று அழைக்கப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, இன்று தனது பிறந்தநாளை தற்போது கொண்டாடியுள்ளார். ஒரே நாளில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை அனுஷ்காவுக்கும் பிறந்த நாள் வருகிறது.

இந்த நிலையில் thug life படம் பற்றி முக்கிய அப்டேட் ஒன்றும் வெளியானது. Thug life படம் அடுத்த வருடம் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகும் என்ற official அப்டேட் கிடைத்தது. இந்த நிலையில், அனுஷ்காவின் அடுத்த படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான சூப்பர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார். தமிழில் மாதவன் ஜோடியாக ரெண்டு படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சிங்கம் சீரிஸ் படங்கள், விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், ரஜினிகாந்துடன் லிங்கா உள்பட பல படங்களில் நடித்தார்.

வெளியான போஸ்டர்

இப்படி பிசி நடிகையாக வளம் வந்த நேரத்தில் உடல் எடை அதிகரித்ததால் வாய்ப்புகள் குறைந்தது. சமீப காலமாக அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது அவர் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் மிரட்டல் லுக்கில் அனுஷ்கா உள்ளார்.

இந்த போஸ்டர் பார்த்த ரசிகர்கள், தலைவி returns என்று அனுஷாகாவை பாராட்டி வருகின்றனர். அனுஷ்கா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த புதிய படத்துக்கு காதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார்.

ghaati-anushka
ghaati-anushka

நெற்றியில் பொட்டு திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும், கையில் சிகரெட்டுடன் வந்த போஸ்டர் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும் எப்போது இந்த படம் வரும் என்று ஆர்வமாக உள்ளனர்.

- Advertisement -

Trending News