Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கௌதம் மேனனால் வாய்ப்பில்லாமல் தவிக்கும் அனுஷ்கா

கௌதம் மேனனால் வாய்ப்பில்லாமல் தவிக்கும் அனுஷ்கா

கௌதம் மேனன் இயக்கத்தில் மல்ட்டி நாயகர்களின் படத்தில் கமிட்டாகி இருந்ததால், வரும் வாய்ப்புக்களை தவிர்த்த அனுஷ்கா தற்போது புதிய படங்கள் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். நாயகிகளில் அதிக உயரம், தேவதை லுக்கில் இருந்தது இவருக்கு ப்ளஸாக அமைந்தது. அதனால், ஈசியாக தனக்கென்ற இடத்தை திரையுலகில் பிடித்து கொண்டார். இதை தொடர்ந்து, மாதவனுடன் ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் எல்லா நாயகிகள் போல நாயகனுடன் டூயட் பாடவே படங்களில் நடித்தார். போக போக நாயகி முக்கியத்துவம் உள்ள படத்தில் அதிகமாக தோன்றினார். அதன் தொடக்கமாக, அவர் நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் இவர் நடிப்பு பலரிடம் செம அப்ளாஸை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பிம்பம் முற்றிலும் வேறு வடிவம் எடுத்தது. மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் பாகுமதி. இதுவும் எப்போதும் போல நாயகி கதை தான். இருந்தும் ஒரே மாதிரியான ராணி வேடம் என்பதால் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, நடிப்பில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு அனுஷ்கா செட்டில் ஆக இருப்பதாக திரைத்துறையில் ஒரு வதந்தி நிலவியது. அந்நேரம், அனுஷ்கா இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் பல மொழி நாயகர்கள் இணைந்து நடிக்க இருக்கும் ஒரு படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆனார். படத்தில் முக்கிய வேடம் என்பதால் அவரை தேடி வந்த வாய்ப்புகளை வேண்டாம் என மறுத்து இருக்கிறார்.

இந்நிலையில், ஐந்து மாதங்களாக கௌதம் மேனனின் அழைப்புக்காக அனுஷ்கா காத்திருக்கிறார். ஆனால், எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் படங்களை முடிக்க கௌதம் இன்னும் காலங்கள் எடுத்து கொள்வார் என தெரிகிறது. இதனால், காத்திருக்கும் முடிவை கை விட்ட அனுஷ்கா, தன்னை தேடி வந்த நிறுவனங்களுக்கு அவரே கால் செய்து வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top