Tamil Cinema News | சினிமா செய்திகள்
அனுஷ்காவின் லவ்வை வெளியில் சொன்ன கருப்பு ஆடு சிக்கியது.
தென்னிந்திய நடிகைகளில் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர்அனுஷ்கா. பார்த்து பார்த்து ரோல்களைத் தேர்ந்தெடுப்பவர். அதே நேரத்தில் அனுஷ்கா பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சம் இருக்காது.
இயக்குநர் க்ரிஷ், ஆர்யா, ராணா, நாகார்ஜுனா என்று அனுஷ்காவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஏராளம்.
அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் பிரபாஸ். தம்மைப் பற்றி இவ்வளவு கிசுகிசுக்கள் பரப்புவது யார் என்று கண்டுபிடித்து விட்டாராம் அனுஷ்கா. தன்னுடைய அசிஸ்டெண்ட்களில் ஒருவர் மூலம்தான் வெளியில் தன்னுடைய பெர்சனல் விஷயங்கள் செல்கின்றன என்பதை அறிந்து அந்த அசிஸ்டெண்டை வேலையில் இருந்து தூக்கிவிட்டாராம்.
அப்படீன்னா… வந்த தகவல்கள் எல்லாம் உண்மைதானோ?
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
