Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர் சி பி அணியை ஊக்கப்படுத்திய அனுஷ்கா சர்மா ! 90000 லைக் குவித்த போட்டோ உள்ளே !
பாலிவுட்டுக்கும் கிரிக்கெட்க்கும் எப்பொழுதுமே நல்ல உடன்பாடு உண்டு . ஷர்மிளா தாக்குர் – மன்சூர் அலி கான் பட்டோடி, அசாருதீன் – சங்கீதா பிஜிலானி , யுவராஜ் – ஹஸீல் கீச், ஹர்பஜன் – கீதா பஸ்ரா, விராட் – அனுஷ்கா சர்மா, சஹீர்கான் – சகாரிக்கா என லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகும்.
விராட் – அனுஷ்கா
சமீபகாலத்தில் செலிபிரிட்டி ஜோடிகளில் மிகவும் பிரசித்தி என்றால் அது விராட் அனுஷ்கா தான். இவர்கள் பல வருடங்கள் காதலித்து பின்னர் மணம் முடித்தனர். மேலும் தங்கள் துறையில் இன்றைய தேதியில் இவர்கள் தான் நம்பர் 1. பல செலிபிரிட்டிகள் தங்கள் துறையில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்ய தயங்குவர். ஆனால் இவர்கள் விதிவிலக்கு.
தங்கள் துணைக்கு வெற்றி , தோல்வி என இரண்டிலும் சப்போர்ட்டாக உடன் இருப்பவர்கள். சில வருடங்களுக்கு முன் வரை அனுஷ்கா மைதானத்தில் வந்தால் கோலி டீம் தோற்று விடும் என்ற சென்டிமென்டும் இருந்தது. இதனை பற்றி பத்திரிகையாளர் கேட்கும் பொழுது கூட விராட் கடுப்பாவர்.
ஐபில் 2018
இந்த சீசன் ஐபில் போட்டிகளில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் கட்டாயம் ஆஜர் ஆகி விடுவார் அனுஷ்கா சர்மா. இந்த முறையும் பெங்களூரு அணி சொதப்பிவிட்டது. பிலே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற மெல்லிய வாய்ப்பு உள்ளது.
RCB VS KKR
நேற்று இந்தூர் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதினர். கட்டாயம் ஜெயித்தாக வேண்டிய சூழலில் பஞ்சாபை பஞ்சு பஞ்சாகி வெற்றி பெற்றது பெங்களூரு. பாசிட்டிவ் ரன் ரேட்டும் கிடைத்து விட்டது.
இந்த போட்டி நாளன்று காலை அனுஷ்கா “கமான் பாய்ஸ்” என்று
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டார். மேலும் தன் கணவரின் 18 ஆம் நம்பர் ஜெர்சி மற்றும் பெயருடன் டி ஷர்ட் அணிந்தும் இருந்தார்.

Anushka Sharma
இந்த ஓற்றை போட்டோ கிட்டத்தட்ட 90000 லைக் மற்றும் 6500 ரீ ட்வீட் பெற்றது.
இதற்கு கோலியும் போட்டியில் வெற்றி அடைந்த பின் “ஆமாம் என அன்பே. நாங்கள் வந்துவிட்டோம்.” என்று பதில் அளித்தார். மீண்டும் ஜெயிக்க அரமபித்து விட்டோம் என்று மறைமுகமாக கெத்தாக பதில் ட்வீட் போட்டார்.
இந்த பதில் 40000 லைக் மற்றும் 3600 ரீ ட்வீட் பெற்றது.
