ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த தேவசேனா அனுஷ்கா அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anushka

6 அடி உயரம், அலட்டல் இல்லாத தேகம் என ரசிகர்களை கவர்ந்தவர் அனுஷ்கா செட்டி. தெலுங்கு, தமிழ் என இரு சினிமா உலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நாயகி முக்கியத்துவம் உள்ள படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் அனுஷ்கா தான். அதிலும், அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி என்று தொடர்ந்து ராஜ பரம்பரையாக அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்தது. தொடர்ந்து, இஞ்சி இடுப்பழகி என்ற ஒற்றை படத்திற்காக குண்டாக மாறினார். படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அனுஷ்காவின் எடையும் குறைய மாட்டேன் என அடம் தான் பிடித்தது. இது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, இரண்டு பாகங்களாக உருவான பாகுபலி படத்தில் தேவசேனா வேடம் ஏற்றார். முதல் பாகத்தில் முதுமையான வேடத்தில் சுள்ளி எடுப்பதை மட்டுமே செய்திருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக அமைந்தது பாகுபலி இரண்டாம் பாகம். பிரபாஸ், ராணா என இரு நாயகர்களுக்கு சமமான வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவரின் பாகமதி படம் போதுமான வரவேற்பை பெற்றது.

அனுஷ்காவை சமீபகாலமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில், கேதர்நாத் கோயிலில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருக்கிறார் அனுஷ்கா. கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும், நெற்றியில் சந்தனத்துடன் அவரை பார்த்த பலருக்கு திரையில் கலக்கிய தேவசேனாவை அடையாளமே காண முடியவில்லை.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஷ்காவை திரைத்துறை தொடர்ந்து வரவேற்பதால், திருமணத்தால் இந்த பயணமாக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஒருவேளை, அனுஷ்கா ஆன்மீகத்தில் இணைந்து விட்டாரோ என குழப்பமும் நிலவுகிறது.