Tamil Cinema News | சினிமா செய்திகள்
நவீன தொழில்நுட்பத்தால் ஒல்லியாக காண்பிக்கப்பட்ட அனுஷ்கா.. வைரலாகும் பாகுபலி புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகை தான் அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களை நடித்து உள்ளார்.
அனுஷ்காவின் ஹைட் வெயிட் வைத்தே அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றுவரை உள்ளது. அதன் விளைவாகவே இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்துக்கொண்டிருந்தது. அதன்பின்பு இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா உடல் எடையை குறைக்க, படாத பாடுபட்டு வருகிறார்.
அத்துடன் படவாய்ப்புகளும் கை நழுவிச் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் பாகுபலி2 படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகத் தொடங்கினார். இந்நிலையில் பாகுபலி2 படத்தில் இடம்பெறும் கட்சி ஒன்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏனென்றால் இதில் படத்திலுள்ள கட்சிக்கு எதிர்மறையாக மற்றொரு படம் ஒப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் அனுஷ்கா இடுப்பு, உடம்பு பகுதி குண்டாக இருப்பதை, CGI மற்றும் VFX உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி,

anushka-b2-cinemapettai
அனுஷ்காவை ஸ்லிம்மாக பாகுபலி2 படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமீபத்தில் அனுஷ்காவின் தற்போதைய புகைப்படமும் வெளியாகி வருகிறது.
இதில் ஸ்லிம்மாக மாறியிருந்த அனுஷ்கா, மீண்டும் கொழுகொழுவென்று குண்டாக காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
