பாகுபலிக்கு பிறகு நம்ம தலைவி அனுஷ்கா நடிச்சுட்டு இருக்குற படம் பாக்மதி. இந்த படத்துல அனுஷ்கா தவிர ஈரம் ஆதி, ஜெயராம், ஆஷா சரத் போன்ற நடிகர்கள் நடிக்குறாங்க. படத்தை தெலுங்கு இயக்குனர் அசோக் இயக்குறார். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டுவருகிறது.

பாக்மதி படம் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் படம் குறித்து அனுஷ்காவிடம் பேசவரும் பத்திரிகையாளர்கள் அனுஷ்காவின் திருமணம் குறித்த கேள்விகளையே முன்வைக்கிறாங்களாம்.

அதுவும் குறிப்பா சமீபத்துல ஒரு பத்திரிகை சந்திப்பில் உங்களுக்கு இத்தனை வயது கடந்தும் ஏன் இன்னும் கல்யாணம் பற்றி யோசிக்க மாட்டேங்குறிங்க? அப்டின்னு ஒருத்தர் கேட்ருக்காரு.

இதை கேட்டு கொந்தளிச்சு எழுந்த நம்ம தேவசேனா “நடிகர்கள் மட்டும் நாற்பது வயது கடந்தும் திருமணம் செய்யாமல் நடிக்கலாம் அதையே ஒரு நடிகை செய்தால் ஏன் திருமணம் செய்யவில்லைனு நச்சரிச்சுகிட்டே இருப்பிங்களா? இந்த ஒரே கேள்வியை எத்தனை பேருதான் கேட்பிங்க? இதுதவிர என்னிடம் கேட்க உங்களுக்கு வேறு எதுவும் இல்லையா?” என்று பொங்கலோ பொங்கல்னு பொங்கிட்டாங்கலாம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அனுஷ்காவை சீண்டினால் சினிமா பேட்டை ஆர்மி சீறிவரும்னு தெரியாதா உங்களுக்கு?